கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் அட்ராஸ்டிக்கள் தாங்க முடியவில்லை என மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சிலர் அத்துமீறி நோயாளிகள் போலில்லாமல் விருந்தாளி போல் நடந்து கொள்வதாகவும் மருத்துவமனை ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான்கு நோயாளிகள் ஒன்று சேர்ந்து ஆன்லைனில் சிக்கன் பிரியாணி, தந்தூரி சிக்கன் செய்துள்ளனர்.
அதை டெலிவரி செய்ய வந்த ஊழியரை மருத்துவமனை காவலாளி திருப்பி அனுப்பியுள்ளார். இதனை கேள்விப்பட்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் அந்த நோயாளிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். கொரோனா தாக்கம் இருக்கும் நிலையில் மருத்துவர்களின் பரிந்துரை செய்யும் உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறி இருக்கின்றனர்.