தப்பி ஓடிய கொரோனா பேஷன்ட்ஸ்! தேடுதல் வேட்டையில் போலீசார்!

0
121
Corona patients who escaped! Police on the hunt!
Corona patients who escaped! Police on the hunt!

தப்பி ஓடிய கொரோனா பேஷன்ட்ஸ்! தேடுதல் வேட்டையில் போலீசார்!

கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது அதிக அளவு பாதித்து வருகிறது.இந்த ஆண்டு கொரோனா,2 வது அலையாக உருமாறி மக்களை விடாமல் துரத்தி வருகிறது.மக்களின் நலன் கருதி அரசாங்கமும் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.மாநிலங்களில் எந்த அளவில் கொரோனா தாக்கம் உள்ளதோ அவ்வாறு அம்மாநிலத்திற்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர்.

அந்தவகையில் தற்போது மகராஷ்டிராவில் அதிக அளவு கொரோனா தொற்று காணப்படுவதால் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதே போல தமிழ்நாட்டில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கையும் மற்றும் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளனர்.அதனால் மக்கள் கூடுவது குறைந்து தொற்றை குறைக்க வலி வகுக்கும் என தெரிவிக்கின்றனர்.அதுமட்டுமின்றி மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளும் படியும் அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.அது தொடர்பான விழிப்புணர்வுகளையும் நடத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதத்தையும் வசூலித்து வருகின்றனர்.அந்தவகையில் தற்போது மகாராஷ்டிராவில் 3000 மேற்பட்ட கொரோனா தொற்று உறுதியானவர்கள் தப்பி ஓடி விட்டனர்.இந்த சம்பவம் அனைத்து மக்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இவர்களை கண்டுபிடிப்பதற்காக போலீசார் தீவிர தேடுதலில் இறங்கியுள்ளனர்.இதில் பலர்,அவர்கள் தங்கிய வீட்டையே காலி செய்து வேறெங்கையோ தப்பி ஓடி விட்டனர் மற்றும் அவர்களது செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளனர்.தப்பி ஓடியவர்கள் தமிழகத்திற்குள் வராமல் இருக்க நீலகிரி எல்லையில் தொடர்ந்து தீவிர சோதனை நடந்தி வருகின்றனர்.

Previous articleமன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம்! நிபந்தனைகளுடன் முன் ஜாமீன்!  
Next articleஅதிமுக முன்னால் அமைச்சர் மறைவு! சோகத்தில் அதிமுக தலைமை!