நேற்றுமுன் தினம் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டசபைத் தொகுதியில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் போட்டியிட்டார். இதற்கு முன்னரே அவர் பலமுறை அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டசபைத் தொகுதி அவர் சொந்த தொகுதி என்ற காரணத்தால், அங்கே அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதோடு அந்த பகுதியில் திமுகவும் நல்வ செல்வாக்குடன் இருந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த நான்கு மாத காலமாகவே கட்டுப்பாட்டிற்குள் இருந்து வந்த கொரோனா வைரஸ் தற்போது கடந்த சில வாரங்களாக வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் தொடங்கிய தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் காரணமாக, அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள் என தொற்று பரவ தொடங்கியது. அதேபோல பல நடிகர் நடிகைகளுக்கும் இந்தத் தொற்று பரவியிருக்கிறது.
இந்த நிலையில், திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களுக்கு தற்சமயம் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர் தொடர்ச்சியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததால் தற்போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.திராவிட முன்னேற்றக் கழகத்தில் முன்னரே சோளிங்கர் சட்டசபைத் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்ட அரவிந்த் ரமேஷ் மற்றும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து தற்சமயம் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.