கலைபுலி எஸ் தாணு தயாரிப்பாளர் அவர்கள் முதல்வர் திரட்டி வரும் கொரோனா நிவாரண நிதிக்கு நிதி அளித்து உள்ளார்.
திரைத்துறையில் பிரபலங்கள் மற்றும் பலரும் பல லட்சம் முதல் கோடி வரை நிதி அளித்து உதவி செய்து வருகின்றனர். ரஜினிகாந்த் ,அஜீத், சூர்யா, சங்கர், ஏ ஆர் முருகதாஸ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் கொரோனாவிற்கு நிதி அளித்து வருகின்றனர்.
சமீபத்தில் விஜய் சேதுபதி 25 லட்சம் கொரோனா நிவாரண நிதிக்காக முதல்வரிடம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா என்கின்ற இந்த நோய்க்கு மக்களுக்கு அனைவரும் உதவுமாறு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்ட நிலையில் பலரும், பல நிறுவனங்கள், பல பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் நிதி கொடுத்து வருகின்றனர்.
முதல்வரின் கருணாநிதிக்காக ரூ 10 லட்சம் ரூபாயை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் அளித்துள்ளார்.
10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அனுப்பி வைத்துள்ளார் மேலும் அதனுடன் ஒரு கடிதத்தையும் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் எஸ் தாணு அவர்கள் குறிப்பிட்டது, ” மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, இருந்துட்டு காலத்தில் ஆட்சியின் முதல் மாதத்தை நிறைவு செய்த நிலையில் உங்களின் வேகமான நடையும் விவேகமான முடிவும் ஓய்வில்லா களப்பணியும் தேசத்தை திரும்பிப் பார்க்க வைக்கிறது. தமிழகத்தின் துரித வளர்ச்சியில் உங்கள் தொலை நோக்குப் பார்வையும், பெரும் தொற்று பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த விளிம்பு நிலை மக்களுக்காக நீங்கள் படைத்த பசியாறும் திட்டங்கள் உங்களையும் ,சந்ததிகளையும் தேக பலம் மனோ பலத்துடன் நீண்ட ஆயுளைத் தரும்.உங்கள் தர்ம சிந்தனைக்கே சினிமா தொழில் சிதைந்து நிற்கும் சூழலில் எனது சிறிய பங்களிப்பாக 10 லட்சத்துக்கான வரவோலையை இணைத்துள்ளேன். உங்கள் வழியில் தமிழகம் தலைநிமிர்ந்து நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்”. என்று தாணு அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டு அனுப்பியுள்ளார்.