தமிழகம்: தொடர்ந்து 3ஆவது நாளாக உயரும் கொரோனா பாதிப்பு!

Photo of author

By Parthipan K

தமிழகம்: தொடர்ந்து 3ஆவது நாளாக உயரும் கொரோனா பாதிப்பு!

Parthipan K

Updated on:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை நேற்று அறிக்கை வெளியிட்டது.அறிக்கையில்,

தமிழகத்தில் புதிதாக 1,631 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,30,592-ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் தமிழகத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதால் இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,119-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து 1,523 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக
குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,79,169-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக சென்னையில் 174, கோவையில் 235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 16,304 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்று 1,57,689 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.