வௌவால்கள் மூலம் கொரோனா பரவல்! ஆய்வறிக்கையின் திக் திக் நிமிடங்கள்!
கொரோனா தொற்றானது சீனா நாட்டில் வுஹான் என்ற இடத்தில் தோன்றியது.இது நாளடைவில் வளர்ந்து பக்கத்து நாடுகளையும் தாக்க ஆரம்பித்துவிட்டது.அந்தவகையில் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.இந்த தொற்றானது அனைத்து நாடுகளையும் எவ்வாறு பாதித்தது என்றே தெரியவில்லை.தற்போது வரை அதிகப்படியான உயிரிழப்புகளையும் சந்திக்க நேரிட்டது.அனைத்து நாடுகளுடன் சீனாவிடம் இத்தொற்று எந்த முறையில் தோன்றியது என பல கேள்விகளை கேட்டு வருகின்றனர்.இருப்பினும் இது தெரியாத புதர் போன்று, தக்க பதில் ஏதும் கிடைக்கவில்லை.
அதேபோல தற்போது கொரோனாவின் பாதிப்பிலிருந்து சீனா மிக விரைவாகவே மீண்டுள்ளது.மீதமுள்ள நாடுகள் மீள்வதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள்.ஆனால் சீனா மட்டும் விரைவாக மீண்டதற்கு காரணம் ஏதும் தெரியவில்லை.தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையினால் இந்தியா பெருமளவு பாதிக்கப்பட்டது.அதுமட்டுமின்றி இந்தியா தடுப்பூசிகள் இன்றியும் ஆக்சிஜன் இன்றியும் பெருமளவு தவித்து வந்தனர்.கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை கூட எரிக்க இடமில்லாமல் பூங்காக்களை பயன்படுத்திக்கொண்டனர்.
இவ்வளவு இழப்புகளை தந்த அந்த கொரோனா தொற்றானது விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவியது தான் என ஓர் சில ஆராய்ச்சிகள் கூறி வருகிறது.அதிலும் குறிப்பாக வௌவால் மூலம் பரவியது எனக் கூறுவது மிகவும் ஆச்சரியப்படக் கூடிய விசியமாக பார்க்கப்படுகிறது.கொரோனா தொற்றானது வௌவால்கள் மூலம் தான் பரவியாத என்பதை கண்டறிய லண்டனில் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆராயிச்சிக்கு அங்குள்ள அருங்காட்சியத்தில் அனைத்து வகை வௌவால்கள் பற்றிய விவரங்களையும் திரட்டி வைத்துள்ளனர்.அதனையடுத்து வௌவால்கள் பலவகைகளில் உள்ளது.அவற்றில் ஹார்ஸ்ஷூ,லீப்-நோஸ்டு,ட்ரிடென்ட் ஆகிய வௌவால்களை தற்போது ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.இந்த ஆராய்ச்சி தற்போது லண்டம் மியூசமில் நடைபெற்று வருகிறது.ஆய்வின் முடிவில் கொரோனா தொற்று இவ்வகை வௌவால்கள் மூலம் பரவுகிறதா என்பது தெரிய வரும்.வெளிநாடுகளில் ஒருவகை இனத்தின் வௌவால்களை செல்ல பிராணிகளாகவும் வளர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.