24 மணிநேரத்தில் 20000 ஐ தாண்டிய கொரோனா தொற்று… திடீரென்று ஏறும் எண்ணிக்கை!

Photo of author

By Vinoth

24 மணிநேரத்தில் 20000 ஐ தாண்டிய கொரோனா தொற்று… திடீரென்று ஏறும் எண்ணிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த 24 மணிநேரத்தில் அதிகமாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்டி படைக்கிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையே மாறிவிட்டது.  நியு நார்மல் எனப்படும் புதிய வாழ்க்கை முறை கொரோனாவால் உருவாகிவிட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்திருந்த நிலையில் இப்போது கணிசமாக அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 கோடிக்கும் மேல் உள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 53 கோடிக்கும் அதிகமானவர்கள் சிகிச்சையில் குணமாகியுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் குறைந்திருந்த கொரோனா தொற்று கடந்த 24 மணிநேரத்தில் அதிகமாகியுள்ளது. 20000 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன.