அறிகுறி இல்லாமலேயே உறுதியாகும் கொரோனா தொற்று – கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

0
141

அறிகுறி இல்லாமலேயே உறுதியாகும் கொரோனா தொற்று – கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா தொற்று பரவல் அதிகம். இந்நிலையில் கொரோனா தடுப்பைச் சிறப்பாகக் கையாளும் பொருட்டு கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனை நியமித்திருந்தது தமிழக அரசு.

சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று காலை கோயம்பேடு பகுதிக்குச் சென்று, ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்தவர் “கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களுக்குச் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது பாதிப்பு கண்டறியப் படுபவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா குறித்த அறிகுறி எதுவும் தென்படவில்லை. ஆனால் அவர்களுக்குப் பரிசோதனை மூலமே பாதிப்பு தெரியவந்துள்ளது. இந்த பரிசோதனையை அதிகரிப்பதால் பாதிப்பு அதிகமாகத் தெரியவருகிறது.

கோயம்பேட்டிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு. இந்த பரிசோதனையை அதிகரிப்பதால் பாதிப்பு அதிகமாகத் தெரியவருகிறது. கோயம்பேட்டிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையைக் கண்டு மக்கள் அஞ்சத் தேவையில்லை; ஆனால் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது. பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்” என்றார்.

Previous articleசீன ஆய்வகத்தில் உருவான கொரோனா – ஆதாரங்கள் உள்ளதாகக் கூறும் அமெரிக்கா
Next article10ம் வகுப்பு பொது தேர்வு எப்போது? – தமிழக கல்வி துறை அறிவிப்பு