ருத்ரதாண்டவம் எடுத்த கொரோனா! பள்ளி மாணவர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு!
மீண்டும் கொரோனாவின் ருத்ர தாண்டவம் ஆனது ஆரம்பிக்க தொடங்கிவிட்டது அந்த வகையில் சீனாவில் ஒரு நாளில் மட்டும் ஆயிரக்கணக்கில் மக்கள் பாதிப்படைந்து உயிரிழந்து வரும் வேளையில் அடுத்தடுத்து உள்ள நாட்டிற்கும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ள நிலையிலும், அங்கிருந்து வருபவர்கள் பெரும்பாலானோருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி வருகிறது.
அந்த வகையில் இன்று சீனாவில் இருந்து வந்த தாய் மற்றும் மகள் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியதை அடுத்து துபாயில் இருந்து வந்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாக உள்ளது. மேலும் தொற்று பரவுவது அதிகரித்த விடாமல் இருக்க மத்திய அரசானது அனைத்து மாநில அரசுகளுக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
அந்த வகையில் அனைத்து மாநிலங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பில் இருக்கும் படியும் மாநிலத்திற்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் அமல்படுத்தியுள்ள நிலையில், தற்போது கல்லூரிகளில் செமஸ்டர் விடுமுறை மற்றும் பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வரும் பொழுது அவர்களின் பாதுகாப்பிற்காக கட்டாயம் முக கவசம் அணிந்து வர கூற வேண்டும் என்று அன்பில் மகேஷ் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனவே பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அவரவர் பாதுகாப்பிற்காக தொற்று பரவாமல் இருக்க கட்டாய முக கவசம் அணிவதோடு சமூக இடைவேளையும் கடைப்பிடிப்பது அவசியம்.