கொரோனா 3வது அலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!
உலகம் முழுக்க கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது.இந்த வைரஸ் சீன நாட்டில் உருவாகி பின்பு பல நாடுகளுக்கும் பரவியது.2019ம் ஆண்டு முதன் முதலில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.இந்த நோயை உலகப் பெருந்தொற்றாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.இதுவரை இந்த தொற்றுக்கு உலகில் உள்ள 188 நாடுகளில் 22,17,60,155 பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 45,83,265 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 33,095,450 பேர் பாதிக்கப்பட்டு அதில் 4,41,443 பேர் உயிரிழந்துள்ளனர்.இறப்பு விகிதம் 1% என்ற போதிலும் இந்திய மக்கள் இன்னும் அச்சத்துடனே உள்ளனர்.இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.ஆரம்பக்கட்டத்தில் நாடு முழுவதும் போது முடக்கம் அமல்படுத்திய மத்திய அரசு அதன் பின்னர் அந்த முடக்கங்களில் இருந்து தளர்வுகளை அறிவித்து இந்த நோயைக் கட்டுப்படுத்தி வந்தது.
இருப்பினும் இந்த நோயின் தாக்கமானது அதிகரித்துக் கொண்டே சென்றதால் கொரோனா வைரஸ் 2ம் அலை உருவாகி நாட்டை மேலும் அச்சமடைய செய்தது.இதனால் இந்த ஆண்டும் பொது முடக்கம் சில மாதங்களுக்கு போடப்பட்டது.இந்த 2ம் அலையிலும் பல்வேறு மக்கள் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே இந்த நோயின் 3வது அலையும் விரைவில் வரக் கூடும் என உலக நாடுகளை எச்சரித்தது.
அதேபோல் தற்போது 3வது அலையானது ஆரம்பமாகி இருப்பதாக மகாராஷ்டிர மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.மத்திய சுகாதாரத்துறை நாட்டிலேயே கேரளாவில் அதிக பாதிப்பு இருப்பதாக தெரிவித்தது.அதற்கடுத்து மகாராஷ்டிரத்தில் அதிக பாதிப்பு இருப்பதாகவும் அறிவித்தது.மகாரஷ்டிராவின் நாக்பூர் நகரத்தில் கொரோனா 3வது அலை ஆரம்பித்துவிட்டதாக எரிசக்தித் துறை அமைச்சர் நிதின் ராவத் அறிவித்துள்ளார்.இதனால் அம்மாநில மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.