சேலத்தை அச்சுறுத்தும் கொரோனா! இந்த மாவட்டத்தில் ஊரடங்கு?
கொரோனா தொற்றானது சீனா நாட்டில் தோன்றியதாக இருந்தாலும் அதன் பாதிப்பு அனைத்து நாடுகளிலும் பெரும் அடியகா இருந்தது.பொருளாதார ரீதியாகவும் அனைத்து நாடுகளும் பின்னடைவை சந்தித்தது.இன்றுவரை பல நாடுகள் பொருளாதார பின்னடைவிலிருந்து மீள முடியாமல் உள்ளது.அவ்வாறு பார்க்கும் பொழுது இலங்கை, கொரோனா தொற்று காரணமாக பொருளாதார ரீதியாக அதிகளவு பின்னடைவை சந்தித்துள்ளது.
அதனால் அந்த நாட்டில் அடிப்படை தேவையான பருப்பு,சர்க்கரை போன்றவை ஆயிரக்கணக்கில் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.நமது இந்தியாவில் தற்போது தான் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.இவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது.கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கே தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது.தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பரவல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அத்தோடு இரவு நேரங்களில் இரவு 10 மணிக்கு மேல் இரவு ஊரடங்கு அமலில் உள்ளது.அதுமட்டுமின்றி 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.நாளடைவில் தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.கல்லூரிகளுக்கும் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டதால் ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் சேலம் மாநகராட்சியில் நாளுக்கு நாள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.தற்போது வரை 21 பகுதிகள் தொற்று அதிகமுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஓர் நாளில் 500 பேருக்கு தொற்று பாதிப்பானது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு தினசரி பாதிப்பு அதிகரித்துக் கொண்டே சென்றால் கட்டாயம் இந்த மாவட்டத்திற்கு ஊரடங்கு போடப்படும் என கூறுகின்றனர்.