இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60975 பேருக்கு கொரோனா தொற்று!

0
134

இந்தியாவில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 60,975 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 31,67,324 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 848 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 58,390 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 24,04,585 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக 7,04,348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பில் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் தான் முதலிடம் வகிக்கிறது. இதுவரை கொரோனா தொற்று காரணமாக 6,93,398 பேர் பாதிக்கப்பட்டடுள்ளனர். மேலும், தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,465 ஆக உயர்ந்துள்ளது.

Previous articleமுன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இன்று பாஜகவில் இணைகிறார்: தமிழக பாஜகவின் முதல்வர் வேட்பாளரா இவர்?
Next articleபோலி போலீஸ் நடத்திய அரசு வேலை நாடகம்:! கோடிக்கணக்கில் பணம் கொள்ளை! பணத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பிஇ பட்டதாரிகள்!