இந்தியாவில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை!

0
172

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 79,628 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,73,544 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,069 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,00,842 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 75,628 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 54,27,706 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 83.84% பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்றைய தேதியில் 9,44,996 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11.32 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 7.78 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleமுன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு காட்டுத்தனமான கவர்ச்சியில் இறங்கிய  காமெடி நடிகை! குழப்பத்தில் ரசிகர்கள்!
Next articleஉலக அளவில் கொரோனா பாதிப்பின் நிலவரம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here