National

இந்தியாவில் ஒரே நாளில் 74,442 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Photo of author

By Parthipan K

இந்தியாவில் ஒரே நாளில் 74,442 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Parthipan K

Button

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 74,442 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,23,816 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 903 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,02,685 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 76,737 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 55,86,703 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 83.34% பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்றைய தேதியில் 9,34,427 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9,89,860 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 7,99,82,394 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அரசியலில் இறங்க வேண்டாம்!  ரஜினியை பற்றி சீமான் அளித்துள்ள காரசாரமான பேட்டி!

சென்னை புறநகர் மின்சார ரயிலில் அனுமதி மறுப்பு… அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு!

Leave a Comment