கொரோனாவை வெற்றிகொண்ட 100 வயதை கடந்த முதியவர்! அவரது குடும்பத்தினர் கூறிய அதியம்?

Photo of author

By Jayachandiran

கொரோனாவை வெற்றிகொண்ட 100 வயதை கடந்த முதியவர்! அவரது குடும்பத்தினர் கூறிய அதியம்?

Jayachandiran

Updated on:

  • சீனாவின் வூகாண் மாகாணத்தில் உருவான கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவி அதிகமான உயிர்பலியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன. சிறு குழந்தை முதல் முதியவர் வரை பாதிப்பு ஏற்படுத்தும் கொரோனா தொற்றால் உலகளவில் 4,96,796 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதேவேளையில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து 100 வயதை கடந்த முதியவர் குணமடைந்த சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எத்தியோப்பியாவில் அப டிகலன் என்ற முதியவர் கொரோனா பாதிப்பு அறிகுறியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர மருத்துவ சிகிச்சையில் இருந்த முதியவருக்கு ஆக்சிஜன் தொடர்ந்து அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் நல்ல நிலைக்கு டிகலன் திரும்பியுள்ளார். இரண்டு வாரங்களாக அவர் சிகிச்சை பிரிவில் இருந்தார்.இந்த முதியவருக்கு 114 வயது இருக்கும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால் பிறப்பு சான்றிதழ் இல்லாமல் வயதை உறுதி செய்ய முடியாது என மருத்துவர் கூறினார். மேலும் இவருக்கு மருத்துவ கணிப்பின்படி 108 வயது இருக்கலாம் என்றும், 80 வயது தாண்டினாலே கொரோனா பாதிப்பில் இருந்து உயிர்பிழைப்பது கடினம் ஆனால் இந்ந வயதிலும் நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்கும் இவர் ஆச்சரியமானவர் என்று மருத்துவர் கூறினார். இதுவரை எத்தியோப்பியாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதித்துள்ளனர். 81 பேர் உயிரிழந்துள்ளனர்.