கொரோனா அறிகுறியால் முதியவரை வீட்டைவிட்டு வெளியே தள்ளிய கொடூரம்!

Photo of author

By Jayachandiran

கொரோனா அறிகுறியால் முதியவரை வீட்டைவிட்டு வெளியே தள்ளிய கொடூரம்!

Jayachandiran

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் வடக்குத்தெரு பகுதியில் 60 வயது முதியவருடன் ஒரு குடும்பம் வசித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக சளி, மூச்சுத்திணறல் மற்றும் இருமலுடன் முதியவர் அவதிப்பட்ட நிலையில், கொரோனா அறிகுறி இருக்கும் என்றும் நினைத்து அவரது வீட்டில் இருந்தவர்களே வீட்டைவிட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர்.

இந்நிலையில் உறவினர்களின் நெருக்கடியின் பேரில் வீட்டைவிட்டு வெளியேறி சாலை பகுதியில் தங்கியுள்ளார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகராட்சி அதிகாரிகள் முதியவரை மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து முதியவர் தங்கியிருந்த இடத்தில் கொரோனா தொற்று இருக்க வாய்ப்புள்ளதால் அங்கு முழுவதுமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பால் பல்வேறு தரப்பு மக்கள் வெவ்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.