திமுகவை தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி!

Photo of author

By Jayachandiran

தமிழகத்தில் ஒரேநாளில் நேற்று மட்டும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 23 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 63 பேரும் உயிரிழந்தனர். இதனால் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,264 ஆக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ-வான குமரகுரு’வுக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு திமுக செஞ்சி தொகுதி எம்எல்ஏ மஸ்தான், செய்யூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி.அரசு, அதிமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசு ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. திமுகவை தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனா அச்சத்தில் இருந்து வருகின்றனர்.