தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவி கீர்த்திகா. இவர் விண்வெளி வீராங்கணையாக வரவேண்டும் என்று கனவோடு இருந்து வருகிறார். விண்வெளி லட்சியத்தோடு படித்துவந்த மாணவிக்கு உக்ரைன் நாட்டிலுள்ள விண்வெளி ஆராய்ச்சிக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. தனது படிப்பிற்காக பல லட்சம் பணம் தேவைப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாணவிக்கு பலர் உதவினர். அண்மையில் தனது முதல்கட்ட படிப்பை முடித்த நிலையில், இரண்டாம் கட்டமாக விண்வெளி வீரர்களுக்கான பைலட் பயிற்சி பெறுவதற்கு டெல்லியில் உள்ள பயிற்சி விமான நிலையத்தில் பயிற்சி பெறுவதற்காக தயார் நிலையில் இருந்தார். கொரோனா பாதிப்பால் அவரது அனைத்தும் தடைபட்டது.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார். முதற்கட்டமாக தேனி பகுதியில் உள்ள நரிக்குறவர் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளை கீர்த்திகா செய்து வருகிறார். மொத்தமாக 400 குடும்பங்களுக்கு உதவ இருப்பதாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.