கொரோனா தாக்காமல் இருக்க 2.89 லட்சத்தில் தங்கத்தில் மாஸ்க் அணிந்த நபர்! வைரலாகும் புகைப்படம் எங்கு தெரியுமா?

Photo of author

By Jayachandiran

சீனாவின் வூகாண் மாகாணத்தில் உருவான கொரோனோ வைரஸ் தொற்றானது வெளிநாட்டு பயணிகள் மூலமாக உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியது. இதனால் பல லட்சம் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதோடு அதிகமான உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு பிறப்பித்து இன்றுவரை மத்திய, மாநில அரசுகள் கடைபிடித்து வருகின்றன.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க சமூக இடைவெளி, முக கவசம் அணிதம், தனிமையில் இருத்தல், வீட்டிலேயே இருப்பது, கைகளை சுத்தமாக கழுவுதல் போன்ற பல்வேறு விழிப்புணர்வை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் கொரோனா தொற்றை முடிந்தவரை தடுக்கமுடியும் என்றும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா நோயில் இருந்து பாதுகாக்க தங்க மாஸ்க் தயாரித்து அணிந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் ஷங்கர் குரேட் என்பவர் தங்க நகைகளின் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். இவர் 2.89 லட்சம் மதிப்புள்ள தங்கத்தினால் உருவாக்கப்பட்ட மாஸ்க் தயாரித்து பயன்படுத்தி வருகிறார். அதை அணிவதிலும் சுவாசிப்பதிலும் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் நோயில் இருந்து பாதுகாக்குமா என தெரியவில்லை. இவரது செயலை இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.