கேரளா இடுக்கி பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட சுற்றுலா விடுதியில் ஊரடங்கு விதிகளை மீறி ஆட்டம் பாட்டத்தோடு மது விருந்து நடந்துள்ளது. சட்டத்திற்கு புறம்பான இந்ந ரகசிய நிகழ்ச்சியில் அரசியல் கட்சியினர், சினிமா நடிகைகள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மது விருந்து மற்றும் பெல்லி நடனம் ஆகியை இரவு 2 மணி நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோ கடந்த 2 நாட்களாக சமூகவலைதளம் மூலம் பரவியது. ஊரடங்கு சட்டப்படி 50 பேருக்கு மேல் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள கூடாது என்ற சூழலில், ஊரடங்கு விதிமுறையை மீறி 300 க்கும் மேற்பட்டோர் கூடி கும்மாளம் அடித்த சம்பவம் குறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேஷுக்கு தகவல் தெரியவரவே உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்பி கருப்பசாமிக்கு உத்தரவிட்டார். இதன்பின்னர் விடுதி உரிமையாளர் ராய் சூரியன் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.