நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் அதனைக் கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகளில் இன்று முதல் மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து நினைவுச் சின்னங்களும் திறக்க அனுமதி வழங்கியுள்ளனர்.
ஆனால், ஆக்ராவில் நோய்த்தொற்று காரணமாக 71 இடங்கள் கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் பதேபூர், ஆக்ரா கோட்டை, சிக்ரி, தாஜ்மகால் ஆகியவை இடம்பெறும் நினைவுச் சின்னங்கள் உள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள நினைவுச் சின்னங்கள் திறக்கப்படாது என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் நோய் தொற்று காரணமாக தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.