கொரோனா பாதிப்பால் திமுக பிரமுகர் உயிரிழப்பு; கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி

Photo of author

By Jayachandiran

பல்லாவரம் பகுதி 37 வது திமுக வட்டச் செயலாளர் எபினேசர். கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினசரி அதிகரித்து வரும் நிலையில், நாளுக்கு நாள் நோயாளிகளின் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தொற்று பாதிப்பால் சாமானிய மக்கள் மட்டுமல்லாது அதிகபட்ச பாதுபாப்பு நிலையில் இருந்து வரும் விஐபி, அரசியல் கட்சி நிர்வாகிகளையும் கொரோனா பதம் பார்த்து வருகிறது.

 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கெரோனா தொற்று பாதிப்பு உறுதியான பல்லாவரம் பகுதி 37 வது திமுக வட்டச் செயலாளர் எபினேசர் மருத்துவ சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். தொடர் மருத்துவ உதவி பெற்று வந்த எபினேசர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இவரது உயிரிழப்பு பல்லாவரம் திமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறாமல் இருக்க தமிழக அரசு ஊரடங்கு விதிமுறையை முழுவதுமாக கடைபிடிக்க தினந்தோறும் அறிவுறுத்தி வருவதும், விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.