மூச்சுத்திணறல் காரணமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

Photo of author

By Jayachandiran

மூச்சுத்திணறல் காரணமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

Jayachandiran

Updated on:

தமிழகம் முழுவதும் கொரோனாவின் தாக்கத்தால் தினமும் பலாயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஒருமுறை உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 21 ஆம் தேதி மருத்துவ சிகிச்சை எடுத்தார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் வந்த காரணத்தால் விரைவில் குணமுடன் வீடு திரும்பினார். இந்த நிலையில் மீண்டும் மூச்சுத்திணறல் காரணமாக திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.மேலும் அமைச்சருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தவும் வாய்ப்புள்ளது.