இந்த நாடுகளுக்கு மட்டுமே விரைவில் விமான போக்குவரத்து சேவை!

Photo of author

By Jayachandiran

இந்த நாடுகளுக்கு மட்டுமே விரைவில் விமான போக்குவரத்து சேவை!

Jayachandiran

இந்தியாவில் இருந்து குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே விரைவில் விமான சேவை தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் கோர தாண்டவத்தால் பல்வேறு நாடுகள் பாதுகாப்பு கருதி தங்களின் விமான சேவையை நிறுத்திக் கொண்டன.

 

இந்நிலையில் அமெரிக்கா, பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு மட்டுமே இந்தியாவில் இருந்து செல்லவும், அந்த நாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கான விமான சேவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் இருந்து குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே இயக்கப்பட உள்ள விமான சேவை குறித்து மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக கூறப்படுகிறது.

 

இதைத்தொடர்ந்து இந்தியா மற்றும் அரபு நாடுகளுக்கு இடையே விமான போக்குவரத்து சேவை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சம்பந்தமான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.