ஊரடங்கு விதிமுறையில் புதிய தளர்வு; -தமிழக அரசு அறிவிப்பு

Photo of author

By Jayachandiran

ஊரடங்கு விதிமுறையில் புதிய தளர்வு; -தமிழக அரசு அறிவிப்பு

Jayachandiran

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை 31 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. தற்போது மேலும் புதிய விதிமுறை தளர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் வேலைக்கு செல்வோரின் பயணமுறை ஓரளவு எளிதாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை கருதியும் சில விதிமுறை தளர்வுகளுடன் இந்த மாத கடைசிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இதற்கு முன்பே அனுமதி அளித்து கட்டுப்பாடுகளுடன், தளர்வுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில் பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில் பணிபுரிவோர் அந்நிறுவனமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் சென்று பணியாற்றலாம். இதில் குறிப்பாக 10 சதவீதம் ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.