இந்த தேதிக்குள் கொரோனா தடுப்பு மருந்து நிச்சயமாக வந்துவிடும்; -எச்.ராஜா பேட்டி

Photo of author

By Jayachandiran

இந்த தேதிக்குள் கொரோனா தடுப்பு மருந்து நிச்சயமாக வந்துவிடும்; -எச்.ராஜா பேட்டி

Jayachandiran

காரைக்குடியில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு எச்.ராஜா பேட்டி; ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் கொரோனா தொற்று வைரஸை தடுப்பதற்கான மருந்து நிச்சயமாக வந்துவிடும். அது உலக அரங்கில் பெருமளவு பாராட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதித்த அமைச்சர்கள் விரைவில் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன் என்று கூறினார்.

 

தமிழக அமைச்சர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது குறித்து கேட்டபோது, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது அவரவர் விருப்பம் என்று தெரிவித்த பின்னர், சாத்தான்குளம் சம்பவத்தை முதலில் கண்டித்தது பாஜகதான் என்றும் அந்த கொலையில் கைதானவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்தார். இந்த வழக்கு சிபிஐ வசம் சென்றிருப்பதால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று கூறினார்.

மேலும் பிரதமர் அறிவித்த நபருக்கு 5 கிலோ அரிசி, பருப்பை தரமான முறையில் மக்களுக்கு வழங்கிட சிவில் சப்ளை நடவடிக்கை தேவை என்று கூறினார்.