சிகிச்சை அளிக்க சென்ற மருத்துவர்கள் விரட்டியடிப்பு; முகத்திற்கு நேராக வந்து இருமிய பரபரப்பு சம்பவம்!

Photo of author

By Jayachandiran

கேரளா திருவனந்தபுரம் அருகேயுள்ள பூந்துரா என்ற கிராமத்திற்கு மருத்துவ குழு ஒன்று காரில் சென்றனர். இந்த கிராமத்தில் கொரோனா வேகமாக பரவுவதாக தகவல் அளித்த நிலையில் மருத்துவர்கள் அங்கு சென்றபோது, இவர்களை ஊருக்குள் செல்ல விடாமல் அந்த கிராமத்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

மேலும் 70 க்கு மேற்பட்டோர் காரை வழிமறித்து தாக்குதல் மற்றும் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. எங்களுக்கு கொரொனான வந்தால் அது உங்களுக்கும் வரட்டும் என்று மருத்துவர்களின் முகத்திற்கு அருகே வந்து இருமியுள்ளனர். இதன்பின்னர் மருத்துவர்கள் அங்கிருந்து வேகமாக வெளியேறினர்.

 

இச்சம்பவம் குறித்து அங்கு சென்ற மருத்துவர் ஒருவர் கூறுகையில்; கொரோனா பற்றி பொய் சொல்வதாகவும், போலியான எண்ணிக்கை கூறுவதாகவும் அவர்கள் கூறினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை திரும்ப ஒப்படைக்கும்படி ஆவேசமாக கூறினார்கள். என் முகத்திற்கு நேராக வந்து இருமினார்கள். கொரோனா இருப்பதை அந்த கிராம மக்கள் நம்ப மறுக்கிறார்கள்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளிடன் தகவல் கொடுத்துவிட்டு எங்களை நாங்கள் தனிமைபடுத்திக் கொண்டோம். பிறகு கொரோனா பரிசோதனை செய்து கொள்வோம். காவல்துறை உதவியின்றி அந்த கிராமத்தில் நுழைய முடியாது என்றும் கூறினார். இந்தியாவில் கேரளாவில் முதல் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.