தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் விதமாக வருகிற ஜூலை 31 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஒரு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வோர் இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.
இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பணியின் காரணமாக அங்கேயே இருப்பவர்களும், பொதுமக்களின் அவசிய தேவையாக இருந்துவரும் அரசின் பேருந்து இயக்கம் எப்போது மீண்டும் இயங்கும் என்பது பற்றி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் போக்குவரத்து இயக்கம் குறித்து அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
மக்களுக்கான பொதுப் போக்குவரத்து பயன்பாடு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் வருகிற நவம்பர் மாதம் வரை மட்டுமே அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றும், பிற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் இலவசமாக அரிசி கொடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். கொரோனா பாதிப்பால் வேலை, வருமானத்தில் பெரும் இழப்பினை மக்கள் சந்தித்து வருகின்றனர்.