இது இல்லாமல் ரேசன் பொருட்கள் வாங்க முடியாது; சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு.!

Photo of author

By Jayachandiran

ரேசன்கடை தொடர்பான விதிமுறைகள்:

* 2000 குடும்ப அட்டகளுக்கு மேல் உள்ள ரேசன் கடைகள் பிரிக்கப்பட வேண்டும்.

* பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

* டோக்கனில் எழுதப்பட்ட தேதி மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும்.

* மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மாஸ்க் அணியாத நபர்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்க முடியாது என்று எச்சரிக்கை செய்ய வேண்டும்.

இதேபோல் கட்டுமான நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதோடு, கட்டாயம் முககவச கண்ணாடி மற்றும் கையுறைஅணிய வேண்டும். பணி நடக்கும் இடத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல் வங்கியிலும் தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிவது கட்டாயமாகும். டோக்கன் வழங்கும் முறை சரியாக இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் 5 வாடிக்கையாளருக்கு மேல் வங்கியில் இருக்க கூடாது. ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்பி மக்கள் வங்கியினுள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் முதியவர்களுக்கு அவரது வீடுகளுக்கே சென்று பணத்தை வழங்க வேண்டும். மாஸ்க் அணியாத வாடிக்கையாளர் பணப்பரிவர்த்தனை போன்ற எந்த சேவைக்கும் அனுமதிக்க கூடாது. இவ்வாறு சென்னை மாநகராட்சி விதுமுறை கூறியுள்ளது.