கிரிக்கெட் ஜாம்பவான் சவுரவ் கங்குலி வீட்டிலேயே தனிமை! எதிர்பாராத நிகழ்வு!

Photo of author

By Jayachandiran

கிரிக்கெட் ஜாம்பவான் சவுரவ் கங்குலி வீட்டிலேயே தனிமை! எதிர்பாராத நிகழ்வு!

Jayachandiran

Updated on:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சவுரவ் கங்குலி தன்னை தனிமைபடுத்திக் கொண்டார். அவரது அண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தனிமையானார். கங்குலி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

 

கங்குலியின் அண்ணன் சினேகாசிஷ் வங்காள கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், கொல்கத்தாவின் பெல்லி வியூ என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அண்ணனும், தம்பியும் ஒரே வீட்டில் இருந்த காரணத்தால் தொற்று பாதிப்பை கருத்தில் கொண்டு கங்குலி தனது வீட்டிலேயே தனிமைபடுத்திக்கொண்டார். கொரோனோ தொற்று உலக நாடுகளில் உள்ள பல்வேறு பிரபலங்களை தொடர்ந்து பாதித்து வருவதோடு, சர்வேதச போட்டிகளான ஒலிம்பிக் போட்டிகளையும் தள்ளிவைக்க காரணமாக அமைந்துவிட்டது. இதனால் விளையாட்டு வீரர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.