கொரோனா பாதிப்பால் விருத்தாசலம் வட்டாட்சியர் உயிரிழப்பு!

Photo of author

By Jayachandiran

கொரோனா பாதிப்பால் விருத்தாசலம் வட்டாட்சியர் உயிரிழப்பு!

Jayachandiran

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியராக கவியரசு (45) பணிபுருந்து வந்தார். இவருக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு வட்டாட்சியர் கவியரசுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

 

தீவிர மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த கவியரசு இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். களப்பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வரும் சூழலில் வட்டாட்சியர் ஒருவர் உயிரிழந்திருப்பது கடலூர் வருவாய்த்துறை பணியாளர்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

நேற்று ஒரே நாளில் மட்டும் 4,087 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும், மேலும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 1 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்
1,13,856 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 2,043 பேர் உயிரிழந்துள்ளனர்.