தெலுங்கானாவில் மேடக் மாவட்டத்தில் ஒரு கிராமத்திற்கு மின் கட்டணத்தை வசூலிக்க மின்வாரிய ஊழியர்கள் இருவர் சென்றுள்ளனர். அப்போது கிராம மக்களிடம் மின் கட்டணத்தை கேட்டபோது, கொரோனா பாதிப்பால் வேலை இழந்து வருமானம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் எங்களிடம் எப்படி மின்சார கட்டணத்தை வசூலிக்கலாம்? என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர்.
இதன் காரணமாக மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. இதையடுத்து பேச்சுவார்த்தையாக இருந்து சண்டையாக மாறியதால் மின்வாரிய ஊழியர்களை அங்கிருந்த தூண் ஒன்றில் கட்டிப்போட்டனர். இச்சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்தி இருவரையும் மீட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது காவல்துறை வழக்குபதிவு செய்துள்ளது. கொரோனா ஊரடங்கினால் மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதித்துள்ளதால் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.