கொரோனா பாதிப்பால் வந்தவாசி திமுக நிர்வாகி உயிரிழப்பு!

Photo of author

By Jayachandiran

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டுமே 4,985 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இருப்பினும் சென்னையை விட பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் வந்தவாசி திமுக நகர செயலாளர் கோட்டை பாபு கொரோனா தொற்று காரணமாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் திமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.