திருவண்ணாமலையில் பெண் உயிரிழப்பு! ஆரஞ்சு மண்டலத்தில் அதிகரிக்கும் ஆபத்து! உலகளவில் 2.64 லட்சத்தை தாண்டியது!

Photo of author

By Jayachandiran

திருவண்ணாமலையில் பெண் உயிரிழப்பு! ஆரஞ்சு மண்டலத்தில் அதிகரிக்கும் ஆபத்து! உலகளவில் 2.64 லட்சத்தை தாண்டியது!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் தினசரி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் 1,485 பேர் வைரஸ் பதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 33 பேர் உயிரழந்திருந்தனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காரணமாக அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 38 லட்சத்தை தாண்டியுள்ளது. உலக நாடுகளில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.64 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் பாதித்தோர் எண்ணிக்கை 49,931 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,694 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 14,183 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.