தமிழகத்தில் இன்று தடுப்பூசி முகாம்! 50 பகுதிகளில் நடத்த ஏற்பாடு!

Photo of author

By Sakthi

நாடு முழுவதும் நோய்த்தொற்று கடந்த 2019ஆம் ஆண்டு பரவத்தொடங்கியது இந்த நோய் தொற்று பாதிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதவாக்கில் தீவிரமடைந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.

இப்படியான சூழ்நிலையில், இந்த நோய்த் தொற்றுக்கு மாற்று மருந்து இல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் திண்டாடி வந்தனர், ஒருவழியாக இதற்கு மாற்று மருந்துகள் உலக நாடுகளில் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவிலும் இதற்கான மாற்று மருந்து கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் நோய்தொற்று தடுப்பூசி போடும் பணி ஆரம்பமானது. முதலில் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்பட்டது. தற்சமயம் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த தடுப்பூசி போடும் பணி சற்று மந்தமாக நடந்து வந்த சூழ்நிலையில், தற்சமயம் மாநிலம் முழுவதும் வாரம்தோறும் தடுப்பூசி முகாம் ஏற்படுத்தப்பட்டு பலகோடி நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பித்து முதல் 9 மாதங்களில் 100 கோடி தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது இது உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக சீன நாட்டில் தான் நூறு கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தற்சமயம் இந்தியாவில் 100 கோடி தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது. இது உலக சாதனையாக பார்க்கப்படுகிறது, இதனை முன்னிட்டு நேற்று இடம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று தடுப்பூசி போடும் பணி மிக விரைவாக நடந்து வருகின்றது, அனேக நபர்களுக்கு தடுப்பூசி போட வசதியாக வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல பகுதிகளில் கூடுதலான தடுப்பூசி மையங்கள் அமைத்து தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த விதத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி முதல் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிற.து அப்படி ஏற்படுத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது மெகா தடுப்பு முகாமில் 16 லட்சத்து 43 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது, அத்துடன் ஐந்தாவது தடுப்பு முகாமில் 22 லட்சத்து 85 ஆயிரம் நபர்களும் என்று ஒட்டு மொத்தமாக ஒரு கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் நபர்கள் இந்த மகா தடுப்பூசி முகாம் மூலமாக பயன் பெற்று இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் மது அருந்துபவர் மற்றும் மாமிசம் சாப்பிடுபவர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளக் கூடாது என்ற தவறான தகவலின் அடிப்படையில் தடுப்பூசி போடாமல் பலர் இருந்து விடுகிறார்கள் ஆகவே இந்த வாரம் சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது.. அந்த வகையில் தமிழ்நாட்டில் ஆறாவது தடுப்பூசி முகாம் இன்று காலை நடைபெற இருக்கிறது. ஐம்பதாயிரம் பகுதிகளில் இந்த முகாமை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

இந்த மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதற்காக கையிருப்பில் இருந்த 66 லட்சம் தடுப்பூசிகள் மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு இருக்கிறது. இரண்டாவது தவணை தடுப்பூசி போடும் பயனாளிகளுக்கு இந்த தடுப்பூசி முகாமில் முதலில் முன்னுரிமை வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.