கொரோனா தடுப்பூசி ஒன்றும் திடீர் மரணத்தை ஏற்படுத்தவில்லை! அறிக்கை வெளியிட்ட ஐ.சி.எம்.ஆர் !!

0
127
#image_title
கொரோனா தடுப்பூசி ஒன்றும் திடீர் மரணத்தை ஏற்படுத்தவில்லை! அறிக்கை வெளியிட்ட ஐ.சி.எம்.ஆர்
கொரோனா தடுப்பூசி ஒன்றும் திடீர் மரணத்தை ஏற்படுத்தவில்லை என்று ஐ.சி.எம்.ஆர் என்று அழைக்கப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா  நோய்த் தொற்று பரவத் தொடங்கியது. அதன் பின்னர் இந்த நோய்த் தொற்று படிப்படியாக உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. இதனால் உலகமே இரண்டு வருடங்களாக முடங்கி போனது.
உலகம் முழுவதும் காட்டுத்தீ போல பரவிய இந்த கொரோனா நோய்த் தொற்று உலகம் முழுவதும் பெரும் மக்களை காவு வாங்கியது. இதையடுத்து அனைத்து நாடுகளும் கொரோரா நோய்த் தொற்றுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் இறங்கினர். அந்த வகையில் கொரோனா நந்தா தொற்றுக்கு கோவிட்ஷீல்ட், கோவாக்சின் என்ற தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட சோதனைக்கு பிறகு மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்த தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட ஒரு சிலருக்கு உடலில் இரத்தம் உறைதல் பிரச்சனை, ஹார்ட் அட்டாக் பிரச்சனை ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து கோவிட் 19 தடுப்பூசி பட்டதால் உயிரிழப்புகள் நிகழ்கின்றது என்று தகவல்கள் பரவத் தொடங்கியது. இதற்கு தற்பொழுது ஐ.சி.எம்.ஆர் நடத்திய ஆய்வு அறிக்கையின் மூலமாக பதில் அளித்துள்ளது.
இந்த அறிக்கையின் மூலமாக ஐசிஎம்ஆர் கூறுகையில் “உண்மையில் கோவிட் 19 தடுப்பூசி போட்டுக் கொண்டதால் உயிரிழப்புகள் அதிகரிக்கவில்லை. திடீர் உயிரிழப்பிற்கு காரணம் தடுப்பூசி பட்டவர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்களாக இருக்கலாம். உடல் உழைப்பு அதிகம் உள்ள நபராக இருக்கலாம். அல்லது வேறு உடல்நலம் பிரச்சனைகள் கூட காரணங்களாக இருக்கலாம்” என்று கூறியுள்ளது.
Previous articleஅம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகள் மறையவில்லையா! இந்த இரண்டு டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!!
Next articleமூன்று பேர் அடித்த அரைசதம்! முக்கியமான போட்டியில் இலங்கையை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்