அமெரிக்கா கொரோனா வைரஸை உருவாக்கியிருக்கலாம்! ஈரான் அதிரடி குற்றச்சாட்டு!
உலகையே ஆட்டி வரும் உயிர்கொல்லி வைரஸ் ஆன கொரோனா வைரஸ் , இதனால் உலகமே கதிகலங்கி வருகிறது.உலக அளவிற்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
192 நாடுகளுக்கு பரவிய இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,36,000 ஆயிரத்து தாண்டியுள்ளது . இந்தியாவில் கொரோனா உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 ஐ நெருங்கப் போகிறது.
சீனாவைவிட இத்தாலியில் உயிரிழப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. தற்போது இத்தாலியில் போல ஈரானிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஈரானில் ஒரே நாளில் 120க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மொத்தம் 1685 ஆக அதிகரித்துள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈரானில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இதுகுறித்து ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி அரசு தொலைக்காட்சியில் பேசினார் அப்போது அவர் கூறியதாவது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா பலமுறை உதவுவதாக முன்வந்தது. அவர்கள்தான் இந்த வைரஸை உருவாக்கியதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அது உண்மையா இல்லையா என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. ஆனால் அமெரிக்கா எங்களுக்கு உதவ முன்வருவது விந்தையாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.