இந்தியாவில் நேற்றை விட உயர்ந்தது கொரோனா பாதிப்பு!! சுகாதார துறை அறிக்கை!! மீண்டும் உயருமா??
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி பாதிப்பு எண்ணிக்கையானது பெரும் உச்சத்தை அடைந்தது. இதை தொடர்ந்து கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வந்தது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட இன்று பாதிப்பு எண்ணிக்கையானது 7.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை சுகாதாரத்துறை அமைச்சர் இன்று வெளியிட்டார் அந்த அறிக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 41 ஆயிரத்து 157 பேர் கொரோனா தொற்றினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 3 கோடியே 11 லட்சத்து 06 ஆயிரத்து 065 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 518 பேர் உயிர் இழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 4 லட்சத்து 13 ஆயிரத்து 609 ஆக உயர்ந்து உள்ளது. இதன் மூலம் உயிரிழப்பு விகிதம் 1.33 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 42,004 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 போடி 2 லட்சத்து 69 ஆயிரத்து 766 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் குணமடைந்தவரின் சதவிகிதம் 97.31 ஆக உள்ளது. சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 660 பேர் ஆக உள்ளது. நாட்டில் இதுவரை 40 கோடியே 49 லட்சத்து 31 ஆயிரத்து 715 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. இந்நிலையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகின்றன. தடுப்பூசி போட்டுக்கள்ளாதவர்களுக்கு கொரோனா வின் இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை பாதிப்பு அதிகரிக்கும் என சுகாதார துறை தெரிவித்துள்ளது.