உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சீனாவில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் இந்த கொரோனா வைரஸ் காரணமாக பலியாகி உள்ளனர் என்பதும் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
சீனா மட்டுமின்றி அண்டை நாடுகளான ஜப்பான் தென்கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் உலகம் முழுவதும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தது மட்டுமின்றி கச்சா எண்ணெயின் விலை வெகுவாக குறைந்துள்ளது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் திரைத்துறையில் ரூபாய் 500 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு விட்டதாகவும் தயாரிப்புப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
அதேபோல் தென்கொரியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளிலும் பார்வையாளர்கள் யாரும் திரையரங்குக்கு வருவதில்லை என்பதால் தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளது.