காவு வாங்கும் கரோனா வைரஸ்! எதிர்க்கட்சித் தலைவரையும் விட்டுவைக்கவில்லை

Photo of author

By Parthipan K

நாளுக்கு நாள் நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனால் நாட்டில் உள்ள அனைவருக்கும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. இது மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், கரோனா தடுப்பு பணியாளர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள், பாமர மக்கள் என அனைவரையும் எந்த பேதமும் பார்க்காமல் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.

 

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் முன்னாள் முதலமைச்சராக இருந்த, தற்போது எதிர்க்கட்சி நிலையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவுக்கு கரோனா வைரஸ் இருப்பதாக உறுதிப்படுத்தியது அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Coronavirus to Killing!  The opposition leader was not spared either
Coronavirus to Killing! The opposition leader was not spared either

 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் தான் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது மருத்துவமனையில் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.