அதிர்ச்சி 29 கோடியை கடந்த உலகளாவிய நோய் தொற்று பாதிப்பு!

Photo of author

By Sakthi

அதிர்ச்சி 29 கோடியை கடந்த உலகளாவிய நோய் தொற்று பாதிப்பு!

Sakthi

Updated on:

சீனா நாட்டில் கடந்த 2019 ஆம் வருடம் கண்டுபிடிக்கப்பட்ட நோய்த்தொற்று தற்சமயம் 221 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நோய் தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது.

இதனால் உலக நாடுகள் பலவும் சீனாவின் மீது கடும் கோபத்தில் இருக்கிறது, ஐநா சபையில் சீனாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகின்ற நிலையிலும், வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

ஆகவே உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 கோடியே 54 லட்சத்து 8 ஆயிரத்து 585 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 39 லட்சத்து 26 ஆயிரத்து 296 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நோய் தொற்று பாதிப்பில் இருந்து இதுவரையில் 25 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 427 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். இருந்தாலும் நோய் தொற்று பரவலால் உலகம் முழுவதும் இதுவரை 54 லட்சத்து 72 ஆயிரத்து 868 பேர் பலியாகி இருக்கிறார்கள்.