ஒமைக்ரான் தொற்றால் ஆபத்தான புதிய வைரஸ் ஏற்படலாம்! உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை!

0
217

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றி அதன் பிறகு உலகம் முழுவதும் சுமார் 221  நாடுகளிலும், மற்றும் யூனியன் பிரதேசங்களிலும், பரவி உலக அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்சமயம் பல பிரிவுகளாக பிரிந்து மனிதனை வாட்டி வதைத்து வருகிறது.

தற்சமயம் தென்னாப்பிரிக்காவில் புதிதாக உருவாகி பல நாடுகளில் ஊடுருவிக் கொண்டிருக்கும் உருமாறிய நோய்தொற்றான ஒமைக்ரான் வைரஸ் முதலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அனைவராலும் கருதப்பட்டது, ஆனால் அந்த நோய் தொற்று பரவும் வேகம் அதிகம் ஆனாலும் டெல்டா வைரசை விட குறைவான பாதிப்பை உண்டாக்கும் என்று தகவல் கிடைத்தது.

இந்த சூழ்நிலையில், புதிய பாதை நோய் தொற்று புதிய வைரசை உருவாக்கக் கூடும் என்று ஐரோப்பாவில் இருக்கின்ற உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்திருக்கிறது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி கேத்தரின் ஸ்மால்வுட் தெரிவிக்கும்போது தற்சமயம் பரவிவரும் புதிய வகை நோய் தொற்று அதிகம் பரவும் தன்மையை கொண்டதாக இருக்கிறது. ஆனால் அதன் பாதிப்பு  டெல்டாவை விட குறைவாகவே இருக்கிறது. இருந்தாலும் இந்த புதிய வகை வைரஸ் ஒரு புதிய மாறுபாடு ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகமாக பெற்று இருக்கிறது, அந்த புதிய மாறுபாட்டை கொண்ட வைரஸ் மிகவும் ஆபத்தானதாகவும், அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும், இருக்கலாம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Previous articleஅதிர்ச்சி 29 கோடியை கடந்த உலகளாவிய நோய் தொற்று பாதிப்பு!
Next articleமுதல்வன் பட பாணியில் அதிரடி காட்டும் பாமக எம்.எல்.ஏ! கதிகலங்கும் ஆளுங்கட்சியினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here