பிரபல சாமியார் கொரோனாவுக்கு பலி…. அவர் முத்தம் கொடுத்த 19 பேருக்கு கொரோனா உறுதி!

0
173

மத்திய பிரேதேசத்தில் பிரபல முத்த சாமியார் கொரோனாவால் உயிரிழந்துவிட்டார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் பிரபல சாமியார் ஒருவர் தனது பக்தர்களுக்கு முத்தம் மூலம் ஆசீர்வாதம் வழங்கி வந்துள்ளார். அதேபோல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, தன்னிடம் வரும் பக்தர்களை வெப்பநிலை அளவிடும்  கருவியை கொண்டு சாதாரணமாக சோதனை செய்து உள்ளே அழைத்து தொடர்ந்து முத்தத்தால் ஆசீர்வாதம் வழங்கி வந்துள்ளார்.

இவரை தினந்தோறும் தரிசிக்க வந்த பக்தர்களில் ஒருவர் மூலம் இவருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. இதனை அறியாத அவர் தொடர்ந்து முத்த ஆசீர்வாதம் வழங்கி வர, திடீரென சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இவர், இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இவரிடம் முத்த ஆசீர்வாதம் வாங்கிய 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து அவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த 19 பேரின் தொடர்பில் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Previous articleஇவங்களுக்கு இ பாஸ் கிடையாதா? மதுபாட்டிலுடன் சிக்கிய பிரபல நடிகை!
Next articleடபுள் செஞ்சுரி போட்ட கிரிக்கெட் வீரர்! செஞ்சுரியில் மரணம்!