கனவு காணாதீர்கள்! ஓபிஎஸ் போட்ட அதிரடி ட்வீட் அதிர்ந்து போன திமுக!

Photo of author

By Sakthi

ஊழலும் திமுகவும் வெவ்வேறு இல்லை என்பதை மக்கள் நன்றாக தெரிந்து கொண்டார்கள் என்றும், இரட்டைஇலை மீண்டும் மீண்டும் மலர்வதை தமிழகத்தின் தீய சக்திகளால் எப்போதும் தடுக்க இயலாது என்றும், தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார், இதுதொடர்பாக அவர் தன்னுடைய வலைப்பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்திய அரசியல் வரலாற்றில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்திய நாட்டிற்கும், தமிழ் நாட்டிற்கும் உலக அரங்கில் மிகப் பெரிய அவமானத்தை கொடுத்த திமுக தமிழக அரசுக்கு மிகப்பெரிய இழப்பை தேடிக் கொடுத்தது 2ஜி அலைக்கற்றை ஊழல், வீராணம் ஏரியின் ஊழல் பூச்சி மருந்து ஊழல், கூவம் ஊழல் என்று கணக்கிலடங்காத ஊழல்களை செய்த திமுக ஊழலின் ஆரம்பமாக இருந்து வருகிறது. என்பதை உலகமே அறியும் பத்து வருட காலமாக ஆட்சியில் இல்லாத விரக்தியில் அந்த ஊழல்களை மக்கள் மறந்திருப்பார்கள் என்று அந்த கட்சியில் இருப்பவர்கள் கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

திமுகவின் கரை படிந்த ஆட்சியை அகற்றுவதற்காக தான் தமிழக மக்கள் அதிமுகவுடன் இணைந்து இருக்கிறார்கள். அவர்கள் உங்களை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் என்று தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.