வெளியாகுகிறது விடியா அரசின் ஊழல் பட்டியல்!! அண்ணாமலை வெளியிட்ட அதிராப்பூர்வ அறிவிப்பு!!
திமுகவின் ஊழல் பட்டியலை நாளை காலை 10.15மணிக்கு வெளியிடப்படும் என டிவிட்டர் பக்கத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து தமிழக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை துறை வாரியாக தெரிவித்து வரும் நிலையில்,
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் குற்றச்சாட்டாக போக்குவரத்து துறை சார்பில் ஊழியர்களுக்கு வழங்க வாங்கப்படும் சுவீட் ஆவினிடம் இருந்து கொள்முதல் செய்யாமல் தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு கொள்முதல் செய்ய முடிவு செய்து இருப்பது கண்டிக்க தக்கது என்றும் உடனே அரசு இதனை திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்தார்
இதே போல் பிஜிஆர் நிறுவனம் மீது மின்சாரம் டெண்டர் குற்றச்சாட்டுபொங்கல் பரிசு தொகுப்பில் தரம் இல்லாதா வெல்லம் வழங்கியதாகவும் இதில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகவும்
https://twitter.com/annamalai_k/status/1646364453091569671?s=48&t=g9p_1PnFR9aZg947iJzetQ
தமிழ்நாடு அரசின் சார்பில் கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் ஹெல்த் மிக்ஸ் பவுடர் மற்றும் ஐயன் சிரப் உள்ளிட்ட பொருட்களை தனியாரிடம் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை அப்போது குற்றம்சாட்டி இருந்தார்.
அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக அரசின் மீது வைத்து வந்த அவர்,ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் தி.மு.க.வை சேர்ந்த 27 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தற்போதைய அமைச்சர்கள் என அவர்களின் சொத்து மதிப்பு மட்டும் 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ஊழல் செய்து வைத்துள்ளனர் என்பதை வெளியிட உள்ளேன் என ஏற்கனவே தெரிவித்திருந்தார்
அதன்படி நாளை காலை 10.15மணிக்கு திமுகவின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்மேலும் அண்ணாமலை கையில் கட்டியுள்ள ராபேல் வாட்சின் விலை எவ்வளவு என்பதற்கான ஆதாரத்தையும் வெளியீட உள்ளார்.இதன் காரணமாக அரசியல் வட்டாராத்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது