கடவுளிடம் வேண்டிய வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லையா? வீட்டிலேயே பரிகாரம் செய்யலாம்!

0
175

கடவுளிடம் வேண்டிய வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லையா? வீட்டிலேயே பரிகாரம் செய்யலாம்!

நமக்கு ஏதாவது ஒரு விஷயம் தேவை இருந்தால் இறைவனிடம் பிரார்த்தனை வைப்பது உண்டு. இறைவனிடம் இந்த விஷயம் நடந்தால் இதை காணிக்கையை செலுத்துவேன் என்று வேண்டுதலை கூறுவதுண்டு. அப்பொழுது இறைவனிடம் இந்த விஷயம் செய்கிறேன் என்று வேண்டும் பொழுது அந்த விஷயத்தை தவறாமல் நடத்தி விட வேண்டும். இல்லையென்றால் தெய்வக் குற்றமாகிவிடும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எந்த வேண்டுதலை வைத்திருந்தாள் குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும். செலுத்த வேண்டிய காணிக்கையை சரியான முறையில் செலுத்தி விட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை.

குடும்பத்தினருக்கு யோகமும் காலமும் நன்றாக அமையும். அதுவே வேண்டுதலை செலுத்தாமல் தள்ளிக்கொண்டே சென்றிருந்தாள். இதற்கு ஏதாவது பரிகாரத்தை செய்து விட வேண்டும். ஆனால் ஒரு விஷயத்தை செய்ய முடியவில்லை என்றால் அதற்கு எந்த வகை தடை ஏற்படுகிறது என்று கவனிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு முடி காணிக்கை முடி திருத்தம் குறிப்பிட்ட காலத்தில் செலுத்த வேண்டும். ஆனால் ஒருமுறை தள்ளிச் சென்றால் மீண்டும் முடி காணிக்கை செலுத்த விடாமல் போய்விடுகிறது. ஒற்றைப்படையில் முடி காணிக்கை செலுத்த வேண்டும். ஆனால் கோவிலுக்கு போக முடியாத அளவிற்கு ஏதாவது ஒரு தடை ஏற்படும். இது போன்ற தடை ஏற்படும் பொழுது வீட்டில் தெய்வத்தினுடைய படத்தில் சந்தன, குங்குமம் , மாலை அலங்காரம் செய்து வேண்டும்.

பின்னர் ஒரு வெள்ளை துணியில் மஞ்சள் தடவி காய வைத்து அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, பின்னர் அதில் சிறிதளவு பச்சரிசி சேர்த்து முடிந்து கொள்ள வேண்டும்.

இதை பூஜையில் நான் வேண்டிய வேண்டுதலை குறிப்பிட்ட காலத்திற்குள் என்னால் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் நிச்சயம் செலுத்த வேண்டிய காணிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றி விடுவேன் என்று மனதார வேண்டிக் கொண்டு நெய் தீபமேற்றி வழிபட வேண்டும்.இப்படி செய்யும் பொழுது தவறவிட்ட குலதெய்வ பிரார்த்தனைகள் அல்லது இஷ்ட தெய்வ பிரார்த்தனைகள் எதுவாக இருந்தாலும் அதனால் உங்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாது பாதுகாக்கும். உங்களால் எப்பொழுது முடியுமோ அப்போது தவறாமல் அந்த பரிகாரங்களை, வேண்டுதல்களை நிறைவேற்றி விட வேண்டும். அப்படி நீங்கள் காணிக்கை செலுத்தும் பொழுது இந்த முடிந்து வைத்த ஒரு ரூபாய் முடிப்பையும் சேர்த்து போட்டு விட வேண்டும்.

author avatar
CineDesk