தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்?

Photo of author

By Sakthi

தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்?

Sakthi

தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் வாட்சாலயா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராக கொண்டு இயங்கி வரும் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு ஆற்றுப்படுத்துனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.

பணியின் விபரங்கள்

பணியின் பெயர் ஆற்றுப்படுத்துநர்‌ (Counsellor)
வயது வரம்பு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம் ரூ.18.536/- தொகுப்பூதியம்.

கல்வித் தகுதி

அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த பட்டதாரி, முதுநிலை பட்டதாரி, பட்டதாரிகள், உளவியல், சமூகவியல், சமூகப் பணி, பொது சுகாதாரம், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது முதுநிலை பட்டய படிப்பு UG Diploma in counselling and communication பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்

குழந்தைகள் சார்ந்த ஆற்றுப்படுத்துதல் பணியில் ஒரு வருடம் தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குழந்தைகள் இல்லங்களில் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

அரியலூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அறிவிக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டிய ஆன்லைன் முகவரி www.ariyalur.nic.in

அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இரண்டாவது தளம் அரசு பல்துறை வளாகம் ஜெயங்கொண்டம் சாலை அரியலூர்- 621 704.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

21- 11- 2022 மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.