காலை எழுந்தவுடன் இதனை மட்டும் குடித்து பாருங்கள்! வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி சர்க்கரை நோய் வராது!

0
94

காலை எழுந்தவுடன் இதனை மட்டும் குடித்து பாருங்கள்! வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி சர்க்கரை நோய் வராது!

நம் உடலில் உள்ள குறைந்த அடர்த்தி கொண்ட கெட்ட கொலஸ்ட்ரால், லிப்போ புரோட்டின் என்று சொல்லக்கூடிய கொழுப்பு அளவு அதிகம் ஆகும் பொழுது நமக்கு ஆரோக்கியமற்ற நிலை ஏற்படும். அதில் குறிப்பிட வேண்டியது என்றால் இதயம் சம்பந்தப்பட்ட நோய் தான்.

குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு சிறிது சிறிதாக சேர்ந்து ரத்த நாளங்களில் அடைப்பை உண்டாகும். அதனால் இதயத்திற்கு சரியான அளவு ரத்த ஓட்டம் கிடைக்காமல் மாரடைப்பு ஏற்படும். அதனை தடுப்பதற்கு என்ன செய்யலாம் என இந்த பதிவின் மூலம் காணலாம். ரத்த நாளங்களில் கெட்ட கொழுப்பு படிப்படியாக படியும் பொழுது இடுப்பு கைகால் போன்ற பகுதிகளில் தசைப்பிடிப்பு ஏற்படும்.

முதலில் கொத்தமல்லி விதையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் அதிக அளவு கால்சியம், இரும்பு ,மெக்னீசியம் பொட்டாசியம், விட்டமின் சி, நார்ச்சத்து போன்றவைகள் இருக்கின்றது.

நார்ச்சத்து என்பது நம் உடலுக்கு மிக மிக அவசியமான ஒன்றாகும். அதனையடுத்து சீரகம் எடுத்துக் கொள்ள வேண்டும். சீரகம் என்பது நம்முடைய அகத்தை சீர் செய்ய உதவுகின்றது. நார்ச்சத்து கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இந்த இரண்டு பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும் அதன் பிறகு கடாயை வைத்து சிறிதளவு சூடான பிறகு ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் 200 மிலி தண்ணீரில் நாம் வறுத்து வைத்துள்ள சீரகம் மற்றும் கொத்துமல்லி விதையை கொட்டி கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பிறகு வடிகட்டி கொள்ள வேண்டும்.

இதனை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அப்பொழுது நம் உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து நரம்பு மற்றும் மூட்டு வலி சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுவதில் இருந்து தடுக்க உதவுகின்றது.

author avatar
Parthipan K