மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த கணவர்:வழக்கு தொடுத்த மனைவி ! நீதிமன்றம் தீர்ப்பு !

0
167

மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த கணவர்:வழக்கு தொடுத்த மனைவி ! நீதிமன்றம் தீர்ப்பு !

டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் தன்னை கட்டாயப் படுத்தி  வல்லுறவு செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அந்த பெண்ணுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமனத்துக்குப் பிறகு தன்னுடைய கணவர் ஒரு திருடன் என்ற உண்மையை அறிந்து அவர் அதிர்ந்துள்ளார்.. இதனால் மனமுடைந்த அந்த பெண் தன்னுடையக் கணவரைப் பிரிந்து தனியாக சென்று வாழ்ந்துள்ளார்.

ஆனாலும் அவரை விடாத அந்த கணவன் டெல்லிக்கு சென்று தனது மனைவியிடம் இனிமேல் திருடமாட்டேன் என சத்தியம் செய்து அவரோடு வாழ ஆரம்பித்துள்ளார். அந்த பெண்ணும் அவர் திருந்திவிட்டார் என்ற நம்பிக்கையில் அவரோடு சந்தோஷமாக வாழ ஆரம்பித்துள்ளார்.

ஆனாலும் அந்த திருட்டுக் கணவர் வீட்டிலேயே தனது வேலையைக் காட்டியுள்ளார். வீட்டில் இருந்த 2 லட்ச ரூபாயைத் திருடிக்கொண்டு சென்றுள்ளார். இது சம்மந்தமாக அந்த பெண் தனது கணவர் மேல் புகார் கொடுக்க போலிஸ் அவரைக் கைது செய்துள்ளது.

அந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த அவர், மனைவியின் வீட்டுக்கு சென்றுள்ளர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்க அவரிடம் அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண் கணவர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக போலீஸில் புகார் கொடுத்தார்.

இது சம்மந்தமான வழக்கு விசாரணை ஒரு வருடமாக நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் ’ 2016-ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி வல்லுறவு சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண் சொல்லியுள்ளார். ஆனால் அதற்கு ஒரு வருடம் முன்பாக சம்மந்தப்பட்ட இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. அதனால் இந்த வழக்கில் பாலியல் பலாத்கார பிரிவின் கீழ் தண்டனைக் கொடுக்க முடியாது’ எனக் கூறியுள்ளனர்.

Previous articleசென்னையில் மானிய உதவியுடன் கூடிய வீட்டு வசதி கடன் திட்ட இணையதள பயிலரங்கு
Next articleசேவாக்கின் தலைமுடியை விட என்னிடம் அதிக பணம் உள்ளது ! பங்கமாக கலாய்த்த சோயிப் அக்தர் !