கொரோனா அலைகள் தொடர்ந்து வரும்! – டாக்டர் காங் எச்சரிக்கை!

0
83

கொரோனாவின் அலைகள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கும். நாம் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை பற்றி டாக்டர் காங் கொரோனாவுக்கு பொருத்தமான வழிமுறைகள் மற்றும் தடுப்பூசிகளையும் புதிய நோய் பரவாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் பட்டியலிடுகிறார்.

கடந்த வாரத்தில் இருந்து கொரோனாவில் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் மே 31 ஆம் தேதியிலிருந்து 124 புதியதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என பதிவாகியுள்ளது. இப்பொழுது அது 2.9 சதவீதமாக உள்ளது. ஒவ்வொரு 100 கொரோனா நோயாளிகளுக்கும், மூன்று பேர் புது வகையான நோய் தொற்று உள்ளது.

மூன்றாவது அலையில் பல மருத்துவர்கள் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படலாம் என்று கூறி வருகின்றனர்.

கொரோனா வின் இந்த இறக்கமற்ற இரண்டாவது அலை முந்தைய நிலையை விட, தற்போது உள்ள மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் ஆக்சிஜன் படுக்கை வென்டிலேட்டர் கள் உயிர் காக்கும் மருந்துகள் சுகாதார பணியாளர்கள் என கடுமையான எதார்த்தம் ஆகியவற்றுடன் அழிவை ஏற்படுத்தி வருகிறது.

அலைகள் தொடர்ந்து வந்துகொண்டே தான் இருக்கும். எந்த சூழ்நிலையிலும் நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும், என டாக்டர் கூறுகிறார்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை பற்றி டாக்டர் பேசுகையில், டாக்டர் காங், கொரோனாவை அழிக்க தடுப்பூசி ஒரு சிறந்த கருவியாக செயல்படுகிறது. மேலும் நோய் பரவாமல் இருக்கவும், புதிய தொற்றுக்கள் ஏற்படாமல் இருக்கவும் தடுப்பூசி ஒரு சிறந்த கருவி என கூறுகிறார்.

தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் 60 டோ 70 சதவிகிதம் நோய் எதிர்ப்பு சக்தியை செயல்திறனை உருவாக்குகிறது. எடுக்கப்பட்ட ஆராய்ச்சிகளின் படி 6 முதல் 9 மாதங்கள் வரை இந்த இயற்கை எதிர்ப்பு சக்தி இருக்கும் எனக் கூறுகிறார்.

டெல்லி ஏற்கனவே நான்கு கொரோனா அலைகளை எதிர்கொண்டது. இரண்டாவது அலை தொற்று நோயாகவும் ஆபத்தானதாகவும் இருக்காது என்று முந்தைய கதைகள் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் இப்போது அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்த ஒரு வாய்ப்புகளையும் எடுக்காமல் மூன்றாவது மற்றும் நான்காவது அலையை நாம் எதிர் கொள்ளா விட்டாலும் நம் கடந்த கால அனுபவத்தின் படி நாம் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் டாக்டர் காங்.

குறிப்பாக கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் பொழுது எப்படி குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதைப் பற்றி புரிய வைக்க வேண்டும்.

பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். ஏனெனில் அடுத்த அலை குழந்தைகளை தாக்கும் என்பதால் குழந்தைகளை பாதுகாப்பதற்காக சிறந்த வழி தடுப்பூசி மட்டுமே. குழந்தைகளுக்கு ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்கனவே மருத்துவமனையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

குழந்தை மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அலைகளில் வென்டிலேட்டர்கள் பற்றாக்குறையை நாம் எதிர் கொண்டதால் அரசு மருத்துவமனைகளில் அதிகமான மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்களை பணி அமர்த்தும் பணியை திட்டமிட்டுள்ளோம். குழந்தைகளுக்கான சிறப்பு படுக்கைகளை திட்டமிட்டு உள்ளோம் என்று கூறினார்

author avatar
Kowsalya